2014-11-19 16:39:54

வத்திக்கானில், Autism எனப்படும் மாற்றுத்திறன் கொண்டோரை மையப்படுத்திய ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கு


நவ.19,2014. Autism எனப்படும் மாற்றுத்திறன் கொண்டோரை மையப்படுத்திய ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கு, நவம்பர் 20, இவ்வியாழன் முதல், 22, சனிக்கிழமை முடிய வத்திக்கானில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நலவாழ்வுப் பணியாளர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள திருப்பீட அவை ஏற்பாடு செய்யும் இக்கருத்தரங்கில், 57 நாடுகளைச் சேர்ந்த, 650 பேர் கலந்துகொள்வர் என்று, இத்திருப்பீட அவையின் தலைவர், பேராயர் Zygmunt Zimowski அவர்கள், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
உலகெங்கிலும் உள்ள குழைந்தைகளில் 1 விழுக்காட்டினர் Autism என்ற மாற்றுத்திறன் கொண்டவர்களாய்ப் பிறக்கின்றனர் என்று பேராயர் Zimowski அவர்கள், விவரம் வழங்கினார்.
நடைபெறவிருக்கும் கருத்தரங்கின்போது, தைவான் நாட்டைச் சேர்ந்த ஓவியர், Leland Lee அவர்கள் வரைந்த ஓவியங்களின் கண்காட்சி ஒன்றும், இத்தாலியப் பாடகர்களின் இசை நிகழ்ச்சியும் நடைபெறும் என்று பேராயர் Zimowski அவர்கள் கூறினார்.

ஆதாரம் : VIS








All the contents on this site are copyrighted ©.