2014-11-18 14:57:03

கொத்தடிமைகள் எண்ணிக்கையில் இந்தியாவுக்கு முதலிடம்


நவ.18,2014. இந்தியாதான் உலகிலேயே மிக அதிகமான அடிமைகளைக் கொண்டுள்ள நாடு என உலக கொத்தடிமைகள் தகவல் அமைப்பு கூறுகிறது.
வேலையிடத்தில் சுரண்டப்படும் தொழிலாளர் எண்ணிக்கையில், இந்தியா முன்னணியில் உள்ளதாகவும், அந்நாட்டில் ஒரு கோடியே நாற்பது இலட்சம் பேர் கொத்தடிமைகள் போன்ற வாழ்க்கைச் சூழலைக் கொண்டுள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இதில் இரண்டாவது இடத்தில் சீனாவும், மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன.
மக்கள்தொகை விழுக்காட்டு அடிப்படையில் மிக அதிகமானவர்களை அடிமையாகக் கொண்டுள்ள நாடு மௌரிடானியா என்றும், அந்நாட்டின் மக்கள்தொகையில் 4 விழுக்காட்டினர் அடிமைத்தளையில் வாழ்கின்றனர் எனவும் கூறப்படுகிறது.
அடிமைத்தனத்தை ஒழிக்க சர்வதேச ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும் என்றும், ஆட்களை பலவந்தமாக கொண்டு சென்று வேலை வாங்குவோர்க்கு தண்டனைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் இந்த ஆய்வறிக்கை விண்ணப்பித்துள்ளது.
உலகில் இன்று, சுமார் மூன்று கோடியே அறுபது லட்சம் பேர் அடிமைத்தளையில் வாழ்கின்றனர் என இந்த ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

ஆதாரம் : Catholic Online/BBC








All the contents on this site are copyrighted ©.