2014-11-17 15:54:33

மத நம்பிக்கையாளர்களுக்கு சீன அரசுக்கட்சியில் அனுமதியில்லை


நவ.17,2014. சீன அரசுக்கட்சியில் அங்கத்தினர்களாக இருப்பவர்கள், எந்த மதத்தையும் பின்பற்றுபவர்களாக இருக்கமுடியாது, ஏனெனில் இறை நம்பிக்கையின்மையே சீன அமைப்புமுறையின் அடிப்படைக் கொள்கை என அரசு இதழ் கூறுகின்றது.
சைனாவின் சிறுபான்மை மற்றும் மதவிவகாரங்களுக்கான துறையின் தலைவர் Zhu Weigun அவர்கள், சீனக் கம்யூனிசக் கட்சியின் அதிகாரப்பூர்வ இதழில் எழுதியுள்ள தலையங்கத்தில், கம்யூனிசக் கட்சியின் அங்கத்தினர்கள் மதச்சடங்குகளில் பங்குபெறுவது குறித்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
வியட்நாம், கியூபா மற்றும் இரஷ்யாவிலுள்ள கம்யூனிச கட்சி அங்கத்தினர்கள் மத நடவடிக்கைகளில் பங்குபெற அனுமதிக்கப்படுவதால், அத்தகைய போக்கை சீனாவிலும் கொண்டுவர எண்ணுவது தவறு என உரைத்துள்ள Weigun அவர்கள், சீனாவில் மத சுதந்திரத்திற்கு அழைப்புவிடுக்கும் சீன அறிஞர்கள் குறித்த தன் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.