2014-11-15 16:10:26

மலேசியாவில் கிறிஸ்தவப் பொருள்கள் பறிமுதல் செய்யப்படுவதைத் தடை செய்வதற்கு விதிமுறைகள்


நவ.15,2014. மலேசியாவில், தகுதியான தலைவர்கள், கிறிஸ்தவ சமயப் பொருள்களை அவசியமின்றி பறிமுதல் செய்வதைத் தடை செய்வதற்கு அந்நாட்டு அரசு சில விதிமுறைகளை அமைத்து வருவதாக ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.
SOP என்று சொல்லப்படும் இவ்வழிமுறைகள், சுங்கவரி, காவல்துறை போன்ற துறைகளின் அதிகாரிகளால் தயாரிக்கப்படுகின்றது என்று உள்துறை அமைச்சகத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுவதாகவும் அச்செய்தி நிறுவனம் மேலும் கூறியது.
இந்த நடவடிக்கை குறித்துப் பேசிய மலேசிய பிரதமர் அலுவலகத்திலுள்ள சட்ட அமைப்பாளர் Tan Sri Joseph Kurup, இவ்வழிமுறைகள் உண்மையிலேயே செயல்வடிவம் பெற வேண்டும் என்ற தனது எதிர்பார்ப்பை வெளியிட்டார்.
மலேசியாவின் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த அக்டோபர் 25ம் தேதி பறிமுதல் செய்யப்பட்ட சாபா பிரிந்த கிறிஸ்தவ சபையின் 130க்கும் மேற்பட்ட நூல்களும், 290 குறுந்தகடுகளும் கடந்த புதனன்று திருப்பி வழங்கப்பட்டதையும் Joseph Kurup குறிப்பிட்டார்.
இந்த நூல்களில் இறைவனுக்குப் பதில் அல்லா என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருந்ததால் இவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.