2014-11-12 15:39:02

நிமோனியாவினால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் - ஐ.நா. உயர் அதிகாரி


நவ.12,2014. நிமோனியா ஒரு ஆபத்தான நோய்; AIDS, மலேரியா, அம்மை போன்ற நோய்களால் ஐந்து வயதுக்கும் உட்பட்ட குழந்தைகள் இறக்கும் எண்ணிக்கையைவிட நிமோனியாவினால் இறக்கும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகம் என்று ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
நவம்பர் 12, இப்புதனன்று உலகெங்கும் கடைபிடிக்கப்படும் நிமோனியா எதிர்ப்பு உலக நாளையொட்டி UNICEF அமைப்பின் நலவாழ்வு செயல்பாடுகளின் தலைவர், மருத்துவர் Mickey Chopra அவர்கள் இவ்வாறு கூறினார்.
2013ம் ஆண்டு வரை, ஐந்து வயதுக்குட்பட்டக் குழந்தைகளின் இறப்புக்கு முதன்மையான காரணமாக இருந்துவந்த நிமோனியா நோயின் தாக்கம், கடந்த ஆண்டு குறைந்திருந்தாலும், இந்நோயினால் உலகில் இன்னும் 9,54,000 குழந்தைகள் இறக்கின்றனர் என்று ஐ.நா. அறிக்கை ஒன்று கூறுகிறது.
குழந்தை பராமரிப்பின்போது, தாய்ப்பால் ஊட்டுதல், கைகளைக் கழுவுதல் போன்ற வெகு எளிய வழிகளால் இந்த நோயின் தாக்கத்தைக் குறைக்கலாம் என்று மருத்துவர் Chopra அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.