2014-11-11 15:49:16

ஜெர்மன் திருஅவை பெர்லின் சுவர் இடிப்பின் 25ம் ஆண்டை நினைவுகூருகிறது


நவ.11,2014. பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதற்கு உதவி செய்த கத்தோலிக்கர் அனைவரையும் பாராட்டியுள்ள அதேவேளை, திருஅவை தனது எதிர்கால மறைப்பணியை கண்முன்கொண்டு செயல்படுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் ஜெர்மன் ஆயர் பேரவைத் தலைவர்.
பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதன் 25ம் ஆண்டை முன்னிட்டு ஜெர்மன் ஆயர் பேரவை நடத்திய கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் Reinhard Marx அவர்கள், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால், இன்னும் பல ஆர்வலர்களின் இறைவாக்குச் சக்தியின்றி ஐரோப்பிய ஒன்றிணைப்பின் அற்புதம் நடந்திருக்க இயலாது என்று கூறினார்.
இவர்களின் அறுவடையின் கனிகளை அனுபவிக்கும் நாம் அவர்களுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளோம் என்று கூறிய Munich-Freising பேராயராகிய கர்தினால் Marx அவர்கள், இந்தச் சுவர் இடிப்பைச் சிலர் முன்னரே எதிர்பார்த்திருக்க, 1989ம் ஆண்டில்கூட பலர் இதில் ஆர்வம் காட்டாமல் இருந்தனர் என்றும் கவலை தெரிவித்தார்.
1989ம் ஆண்டு நவம்பர் 09ம் தேதி பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது. இதன்மூலம், 28 ஆண்டுகளாகப் பிரிந்திருந்த இரு ஜெர்மனிகளும் ஒன்றிணைந்தன.

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.