2014-11-11 15:49:46

ஆஸ்திரேலிய குடியேற்றதார தடுப்புக்காவல் முகாம்களைக் கண்காணிக்க குழு


நவ.11,2014. ஆஸ்திரேலியாவில், சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களைத் தடுத்து வைக்கும் முகாம்கள் எப்படி நடத்தப்படுகின்றன என்பது பற்றியும், அங்கு உரிமை மீறல்கள் நடக்கின்றன என்ற குற்றச்சாட்டுகள் குறித்தும் கண்காணிக்க ஆஸ்திரேலிய அரசு குழு ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
குழந்தைகள் உட்பட, தஞ்சம் கோரி ஆஸ்திரேலியா வருபவர்களை முதலில், ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்புக்கு வெளியே Nauru மற்றும் Manus இருக்கும் பரிசீலனை மையங்களில், தடுத்துவைத்து பின்னர் முடிவெடுக்கும் அதன் கொள்கை குறித்து ஆஸ்திரேலியா, சித்ரவதைக்கு எதிரான ஐ.நா குழுவினால் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது.
இந்நிலையில், தடுப்புக் காவல் மையங்களை நிர்வகிக்கும் நிறுவனங்கள் சரியாக நடக்கின்றனவா என்பதை சார்பற்ற முறையில் உறுதி செய்யவேண்டிய திறன் அரசுக்கு இருக்கவேண்டும் என்பது முக்கியம் என்று ஆஸ்திரேலிய குடியேற்றதாரர் துறை அமைச்சர் ஸ்காட் மாரிசன் கூறினார்.

ஆதாரம் : பிபிசி







All the contents on this site are copyrighted ©.