2014-11-10 15:40:39

திருத்தந்தையுடன் Ghana அரசுத்தலைவர் சந்திப்பு


நவ.10,2014. இத்திங்கள் காலை திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து உரையாடினார் Ghana நாட்டு அரசுத் தலைவர் John Dramani Mahama.
திருத்தந்தையுடனான சந்திப்புக்குப்பின் திருப்பீடச்செயலர் கர்தினால் பியேத்ரோ பரோலின், நாடுகளுடனான திருப்பீடச் செயலகத்தின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினார் Ghana அரசுத்தலைவர் .
திருப்பீடத்திற்கும் Ghana நாட்டிற்கும் இடையே நிலவி வரும் நல்லுறவு, கல்வி மற்றும் நலத்துறைகளில் Ghana திருஅவை ஆற்றிவரும் பணிகள், பல்வேறு மதங்களிடையே, இனங்களிடையே இருக்கவேண்டிய இணக்க வாழ்வு போன்றவை குறித்து இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக திருப்பீடத் தகவல் தொடர்பு அலுவலகம் கூறியது.
சர்வதேச விவகாரங்கள் குறித்தும், குறிப்பாக ஆப்ரிக்காவை அச்சுறுத்திவரும் Ebola நோய் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.