2014-11-08 15:49:11

கிறிஸ்தவ மற்றும் யஜிதி இனப் பெண்களை ஐஎஸ் அமைப்பு விற்கிறது


நவ.08,2014. கிறிஸ்தவ மற்றும் யஜிதி இனப் பெண்களை, ஐஎஸ் இஸ்லாமியத் தீவிரவாதிகள் அடிமைகளாக விற்கின்றனர் என்பதை விளக்கும் காணொளிப்படம் ஒன்று அண்மையில் வெளியாகியுள்ளது.
பல நாள்களுக்கு முன்னர், குர்த் இனப்படைகள் இஸ்லாம் தீவிரவாதி ஒருவரின் கைபேசியிலிருந்து கண்டுபிடித்த காணொளி ஒன்றில், பாலியல் அடிமை வர்த்தகம் எவ்வாறு நடைபெறுகின்றது என்று தெரியவந்துள்ளது.
ஒன்று முதல் ஒன்பது வயதுச் சிறுமிகள் ஏறக்குறைய 140 யூரோக்களுக்கும், நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களை ஐம்பது யூரோக்களுக்கும், மற்றவர்கள் இதில் பாதி விலைக்கும் விற்கப்படுவதாகத் தெரிகிறது.
ஒரே நேரத்தில் ஒருவர் மூன்று பெண்களுக்குமேல் வாங்க முடியாது என்ற விதிமுறைகள் உள்ளன, எனினும், ஈராக், சிரியா மற்றும் வளைகுடாப் பகுதியைச் சேர்ந்தவர்கள் விலைக்கு வாங்கலாம் என்றும் அந்தக் காணொளிப்படம் மூலம் தெரிவதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
இதற்கிடையே, ஐஎஸ் இஸ்லாமிய அரசின் தீவிரவாதிகள் பெரும்பாலும் சிரியாவில் இருந்து சிறுவர்களைச் சண்டைக்காகச் சேர்த்து, அவர்களுக்கு பயிற்சியும் வழங்குகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஆதாரம் : Rome Reports







All the contents on this site are copyrighted ©.