2014-11-08 15:48:45

12 வயதுச் சிறுவன் உட்பட எட்டுப் பேரின் வீரத்துவமான வாழ்வுமுறைகள் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டன


நவ.08,2014. அருளாளர் நிலைக்கு உயர்த்துவதற்கென, 12 வயதுச் சிறுவன் உட்பட எட்டு இறையடியார்களின் வீரத்துவமான வாழ்வுமுறைகள் பற்றிய விபரங்களை, புனிதர்கள் திருப்பேராயம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் இச்சனிக்கிழமையன்று சமர்ப்பித்தது.
கப்புச்சின் சபையின் முதல் ஆயரான சிலே நாட்டு ஆயர் Francesco Massimiano Valdés Subercaseaux, இத்தாலியரான புனித பெனடிக்ட்டின் சில்வெஸ்த்ரினா சபையின் தலைவர் Ildebrando Gregori, புனித பிலிப்நேரி சபையின் அருள்பணியாளர் Raimondo Calcagno, அயர்லாந்து நாட்டு இயேசு சபை அருள்பணியாளர் Giovanni Sullivan, ஜெர்மானியரான புனித மீட்பர் சபையின் அருள்பணியாளர் Pelagio Saúter, பிரான்ஸ் நாட்டவரான Hotel-Dieu மருத்துவமனை சபையைத் தொடங்கிய Giovanna Mance, பிறரன்பு விடுதிக் கழகச் சபையைத் தொடங்கிய மற்றொரு பிரான்ஸ் நாட்டவர் Marta Luigia Robin, இத்தாலியரான சிறுவன் Silvio Dissegna ஆகிய எட்டுப் பேரின் வீரத்துவமான வாழ்வுமுறைகள் திருத்தந்தையிடம் பரிந்துரைக்கப்பட்டன.
இந்த எட்டுப் பேரில் பிரான்ஸ் நாட்டின் Giovanna Mance, Marta Luigia Robin ஆகிய இரு பெண்களும் பொதுநிலையினர். மேலும், 12 வயதுச் சிறுவனாகிய Silvio Dissegna, 1967ம் ஆண்டு ஜூலை ஒன்றாந் தேதி Moncalieriல் பிறந்து, 1979ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி Poirinoல் காலமானார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.