2014-11-07 15:29:06

ஐ.நா.வில் புனித பிரான்சிஸ் அசிசியார் பற்றிய கண்காட்சி


நவ.07,2014. புனித பிரான்சிஸ் அசிசியார் பற்றிய கண்காட்சி ஒன்றை, இம்மாதத்தில் நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அசிசி நகரின் துறவு இல்லத்தின் நூலகத்திலிருந்து எடுக்கப்பட்ட 13ம் மற்றும் 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த புனித பிரான்சிஸ் அசிசியார் பற்றிய படங்கள், அவரின் கையெழுத்துப் பிரதிகள், உருவங்கள், போன்றவை இந்தக் கண்காட்சியில் வைக்கப்படும்.
திருப்பீடத்தின் உதவியோடு வைக்கப்படவுள்ள இத்தகைய இக்கண்காட்சி, ஐ.நா. தலைமையகத்தில் நடப்பது இதுவே முதல் தடவை என்று கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.