2014-11-04 15:09:30

கொரியத் திருஅவை : ஏழைகளுக்கு உதவுவதற்காக திருத்தந்தையின் பெயரில் வங்கிக் கணக்கு


நவ.04,2014. சமுதாயத்தில் ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கவும், பிற பிறரன்புப் பணிகளுக்கு உதவுவதற்குமென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரில் வங்கிக் கணக்கு ஒன்றைத் தொடங்குவதற்கு தென் கொரிய ஆயர்கள் தீர்மானித்துள்ளனர்.
“நல்ல சமாரியர் சேமிப்பு” என்ற பெயரிலும் இயங்கும் இந்த வங்கிக் கணக்கு, 2015ம் ஆண்டிலிருந்து செயல்படத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரிய ஆயர்கள் நடத்திய ஆண்டுக் கூட்டத்தின் இறுதியில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நற்செய்தியின் மகிழ்வு என்ற திருத்தந்தையின் அறிவுரைத் தொகுப்பை உண்மையிலேயே நடைமுறைப்படுத்துவதற்கு ஆயர்களாகிய நாங்கள் இந்த வங்கிக் கணக்கை ஆரம்பிக்கிறோம் என்று, கொரிய ஆயர்கள் பேரவையின் தலைவர் பணியை நிறைவுசெய்திருக்கும் ஆயர் Peter Kang U-il அறிவித்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தியின் மகிழ்வோடு கொண்டிருக்கும் தொடர்பை விசுவாசிகள் நினைவுகூருமாறும் கேட்டுள்ள ஆயர் Kang அவர்கள், கொரிய ஆயர்களும் தங்கள் வாழ்வுமுறையை மாற்றியமைக்குமாறு பரிந்துரைத்தார்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.