2014-11-01 14:46:41

கத்தோலிக்கத் திருஅவையும், லூத்தரன் கிறிஸ்தவ சபையும் இணைந்து புதிய அறிக்கை ஒன்றை வெளியிடும், கர்தினால் Koch நம்பிக்கை


நவ.01,2014. 2017ம் ஆண்டில் சிறப்பிக்கப்படவிருக்கும் லூத்தரன் கிறிஸ்தவ சபையின் ஐந்தாம் நூற்றாண்டுக் கொண்டாட்டங்களின்போது கத்தோலிக்கத் திருஅவையும், லூத்தரன் கிறிஸ்தவ சபையும் இணைந்து புதிய அறிக்கை ஒன்றை வெளியிடும் என்ற தனது நம்பிக்கையைத் தெரிவித்தார் வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர்.
திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைத் தலைவர் கர்தினால் Kurt Koch அவர்கள், லூத்தரன் கிறிஸ்தவக் கூட்டமைப்புக் கூட்டத்தில் உரையாற்றியபோது இந்நம்பிக்கையைத் தெரிவித்தார்.
திருஅவை, திருநற்கருணை, திருப்பணி ஆகியவை குறித்து இவ்விரு சபைகளும் இணைந்து புதிய அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்ற தனது எதிர்பார்ப்பையும் குறிப்பிட்டார் கர்தினால் Koch.
இவ்விரு சபைகளும், 1999ம் ஆண்டில் ஏற்புடைமை கோட்பாடு பற்றி வெளியிட்ட அறிக்கையையும் சுட்டிக்காட்டினார் கர்தினால் Koch.
1517ம் ஆண்டில் மார்ட்டின் லூத்தர் அவர்களால் மேற்கத்திய திருஅவையில் ஏற்பட்ட பெரும் பிளவால் லூத்தரன் கிறிஸ்தவ சபை உருவானது.
1947ம் ஆண்டில் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், சுவிட்சர்லாந்தின் Lund நகரில் லூத்தரன் கிறிஸ்தவக் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. இதில் 79 நாடுகளின் 144 சபைகள் உறுப்புக்களாக உள்ளன. அக்கூட்டமைப்பில் 7 கோடியே 20 இலட்சத்துக்கு மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஆதாரம் : CWN







All the contents on this site are copyrighted ©.