2014-10-31 15:19:18

சாம்பியாவில் புதிய அரசு அமைதியான முறையில் அமைக்கப்பட கிறிஸ்தவத் தலைவர்கள் செபம்


அக்.31,2014. சாம்பியா நாட்டு அரசுத்தலைவர் Michael Chilufya Sata அவர்களின் இறப்புக்குத் தங்களின் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ள அதேவேளை, குடிமக்கள் அனைவரும் தங்களோடு செபத்தில் ஒன்றிணைந்து இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர் அந்நாட்டுக் கிறிஸ்தவத் தலைவர்கள்.
அரசுத்தலைவரின் இறப்பையொட்டி துக்கம் கடைப்பிடிக்கப்பட்டுவரும் இந்நாள்களில், அரசுத்தலைவருக்கு, தகுதியும் மதிப்புமிக்க அடக்கச்சடங்கு இடம்பெறுவதற்கு உதவும் வகையில், மக்கள் ஒற்றுமையாக இருக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர் கிறிஸ்தவத் தலைவர்கள்.
சாம்பிய கத்தோலிக்க ஆயர்கள் உட்பட அந்நாட்டின் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதியான முறையில் புதிய அரசு உருவாகவும், நாடெங்கும் அமைதி நிலவவும் தங்களோடு சேர்ந்து செபிக்குமாறு நாட்டினர் அனைவரையும் கேட்டுள்ளனர்.
சாம்பியாவின் அரசுத்தலைவர் Michael Sata(77 வயது) அவர்கள் அக்டோபர் 28, இச்செவ்வாயன்று இலண்டனில், அரசர் 7ம் ஹென்ரி மருத்துவமனையில் காலமானார்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.