2014-10-22 15:57:25

'ஆபத்தில்லாத தீபாவளி' - வங்காள பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு முயற்சிகள்


அக்.22,2014. சட்டப்படி அனுமதிக்கப்படாத, ஆபத்தான வெடிகளை தீபாவளி நேரத்தில் வெடிப்பதால் உருவாகும் ஆபத்துக்களை மக்கள் உணரும் வகையில் வங்காள பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொண்டனர்.
இப்புதன், விழாயன் ஆகிய நாட்கள் இந்தியாவில் கொண்டாடப்படும் தீபாவளித் திருநாளையொட்டி, 'ஆபத்தில்லாத தீபாவளி' என்ற மையக்கருத்துடன், வங்காள அரசின் ஆதரவுடன், கொல்கத்தா மாநகரில் அரசுப் பள்ளி மாணவர்கள், இச்செவ்வாயன்று விழிப்புணர்வை உருவாக்கும் ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டனர்.
சட்டத்தால் அனுமதிக்கப்படும் சப்த அளவைத் தாண்டும் வகையில் உருவாக்கப்படும் வெடிகளைத் தடை செய்வதற்கு வங்காள அரசின் காவல் துறையினர் எடுத்துவரும் முயற்சிகளுக்கு அரசு பள்ளி மாணவர்களின் ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று IANS செய்தி நிறுவனம் கூறுகிறது.
கடந்த ஆண்டு, சட்டத்திற்குப் புறம்பான 89 வகை வெடிகள் தடை செய்யப்பட்டன என்று இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.

ஆதாரம் : UCAN








All the contents on this site are copyrighted ©.