2014-10-09 16:42:56

கடத்தப்பட்ட பிரான்சிஸ்கன் துறவி விடுவிக்கப்பட்டும் வீட்டுக்காவலில்....


அக்.09,2014. கடந்த ஞாயிறு அதிகாலை சிரியாவில் கடத்திச்செல்லப்பட்ட பிரான்சிஸ்கன் துறவுசபை அருள்பணி Jallouf Hanna விடுவிக்கப்பட்டுள்ளதாக ஃபிதெஸ் செய்தி நிறுவனம் அறிவிக்கிறது.
Jabhat al-Nusra என்ற இஸ்லாமிய தீவிரவாதப் பிரிவால் கடத்திச்செல்லப்பட்ட அருள்பணி ஹன்னாவுடன் எடுத்துச்செல்லப்பட்ட ஏனைய ஆண்கள் குறித்து எவ்வித செய்தியும் இதுவரை கிட்டவில்லை என அலெப்போ இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தையின் பிரதிநிதி ஆயர் Georges Abou Khazen கூறினார்.
இவர்களுடன் கடத்தப்பட்ட நான்கு பெண்கள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புனித பூமியிலுள்ள முக்கிய இடங்களின் திருஅவை பொறுப்பாளராகச் செயல்படும் பிரான்சிஸ்கன் துறவுசபை அலுவலகத்தின் கூற்றுப்படி, இஸ்லாமிய நீதிமன்றத்தின் தீர்ப்பின்கீழ் Knayeh கிராமத்திலுள்ள புனித ஜோசப் மடத்தில் அருள்பணி ஹன்னா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.