2014-10-08 16:39:14

திருத்தந்தையின் இலங்கைத் திருப்பயணம் நல்லிணக்கத்தை உருவாக்கும், மன்னார் ஆயர்


அக்.08,2014. இலங்கையில் போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இலங்கைத் திருப்பயணம், நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு வழி அமைக்கும் என்ற தனது நம்பிக்கையை வெளியிட்டுள்ளார் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசஃப்.
இலங்கை அரசுத்தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தது பற்றி பிபிசியிடம் கருத்து தெரிவித்த ஆயர் ஜோசஃப் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இலங்கை வரும்போது, போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரங்களை கேட்டறிவதன் மூலம் ஒரு நன்மை ஏற்படக்கூடும் என்றும் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இலங்கைத் திருப்பயணம் 2015ம் ஆண்டு சனவரி 13 முதல் 15 வரை நடைபெறும். மேலும், 2015ம் ஆண்டில் திருத்தந்தை, பிரான்ஸ் நாட்டுக்கும் திருப்பயணம் மேற்கொள்ளவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : பிபிசி







All the contents on this site are copyrighted ©.