2014-10-07 16:17:19

மியான்மாரில் மூவாயிரத்துக்கு மேலான கைதிகள் விடுதலை


அக்.07,2014. அரசியல் கைதிகள், முன்னாள் இராணுவ உளவாளிகள், உட்பட நூற்றுக்கணக்கான கைதிகளை, மனிதாபிமான அடிப்படையில் மியான்மார் நாடு விடுதலை செய்யத் தொடங்கியிருப்பதாக இச்செவ்வாயன்று அதிகாரிகள் கூறினர்.
அனைத்துலக மற்றும் அப்பகுதித் தலைவர்களின் பெரிய அளவிலான கூட்டம் வருகிற நவம்பரில் மியான்மாரில் நடைபெறவிருப்பதற்குத் தயாரிப்புகளை மேற்கொண்டுவரும் அந்நாட்டு அரசு, நாட்டில் தீவிர சீர்திருத்தத்தின் அடிப்படையில் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கத் தொடங்கியுள்ளது எனச் செய்திகள் கூறுகின்றன.
அரசுத்தலைவர் Thein Sein, 58 வெளிநாட்டவர் உட்பட 3073 கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார் என தகவல்துறை அமைச்சர் Ye Htut இச்செவ்வாயன்று கூறினார்.
மியான்மாரில் இன்னும் எழுபதுக்கு மேற்பட்ட அரசியல் கைதிகள் உள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

ஆதாரம் : AFP








All the contents on this site are copyrighted ©.