2014-10-03 16:25:27

மத்திய கிழக்கு கிறிஸ்தவர்கள் குறித்த வத்திக்கான் கூட்டம்


அக்.03,2014. மத்திய கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்களின் நிலைமைகள் குறித்து திருப்பீடச் செயலகத்தில் நடைபெறும் மூன்று நாள் கூட்டத்தில், இவ்வெள்ளி காலை அமர்வில் பேசிய, திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி, மத்திய கிழக்குப் பகுதியின் அரசியல் நிலைமை குறித்து விளக்கினார்.
மத்திய கிழக்குப் பகுதியில் உண்மையான அமைதியை, ஒரு பக்க சார்பான இராணுவ பலத்தால் பெற முடியாது என்றும் கூறினார் பேராயர் மம்பெர்த்தி.
மேலும், இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்கள் குறித்தும், புனித பூமியில் கிறிஸ்தவர்களின் நிலைமைகள் குறித்தும், இஸ்ரேல்-பாலஸ்தீனாவுக்கான திருப்பீடத் தூதர் விளக்கினார்.
இன்னும், தொடர் முயற்சிகள், செபம் மற்றும் கடவுளின் உதவியுடன் மத்திய கிழக்கில் ஐஎஸ் இசுலாமியக் கருத்துக்கோட்பாட்டை முறியடிக்க முடியும் என, சிரியாவுக்கான திருப்பீடத் தூதர் பேராயர் மாரியோ செனாரி கூறினார்.
இக்கூட்டம் இச்சனிக்கிழமையன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.