2014-10-02 16:04:44

திருத்தந்தை : செல்வ வளம் மட்டுமல்ல, பொருளாதர இடைவெளிகளும் அதிகரித்துள்ளன


அக்.02,2014. உலகச்சந்தை வியாபாரம், பல நாடுகளின் செல்வச் செழிப்பிற்கு காரணமாக இருந்துள்ள அதேவேளை, அந்நாடுகளில் புதுவிதமான ஏழ்மைநிலை உருவாகவும், மக்களிடையே பொருளாதார இடைவெளிகள் அதிகரிக்கவும் காரணமாக இருந்துள்ளது என கவலையை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நீதி மற்றும் அமைதிக்கான திருப்பீட அவையின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டோரை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொழிலின் மாண்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து வலியுறுத்திக் கூறினார்.
பொருளாதார சரிநிகரற்ற தன்மைகளும், ஏழ்மையும் இன்றைய சனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளன என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்களின் அடிப்படைத் தேவைகளாக, கல்வி, நலஆதரவுப் பணிகள் மற்றும் வேலைவாய்ப்புகள் முன் நிற்கின்றன என்றார்.
வேலைவாய்ப்புகளைச் சுருக்கி, இலாபத்தை அதிகரிக்கும் கண்ணோட்டங்கள், மனித குலத்திற்கும் பொதுநலனுக்கும் உதவவே பொருளாதாரம் என்ற நோக்கிலிருந்து விலகிச் செல்கின்றன என மேலும் உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.