2014-09-29 16:01:14

திருத்ததை: தலைமுறைகளின் சந்திப்புகள் வருங்காலத்திற்கு உறுதி


செப்.29,2014. தலைமுறைகளுக்கு இடையே பலன் தரும் சந்திப்புகள் இல்லையெனில் அங்கு மனிதகுலத்திற்கான வருங்காலம் இருக்கமுடியாது என உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
முதிய தலைமுறைக்கும் இளைய தலைமுறைக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் இடம்பெறாச் சூழல்களிலும், தங்கள் பெற்றோரைவிட்டு விலகிச் செல்ல இளையோர் ஆழமான ஓர் உணர்வைக்கொள்ளும்போதும் வருங்காலம் குறித்த அச்சம் எழுகின்றது என இஞ்ஞாயிறன்று முதியோர்களுடன் நிறைவேற்றியத் திருப்பலியில் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
நீடிய ஆயுளுக்கான ஆசீர் என்ற தலைப்பில் இஞ்ஞாயிறன்று தூய பேதுரு வளாகத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுடன் உலகின் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், முதியோர்கள் மக்களால் கைவிடப்படும் நிலை ஒருபோதும் இடம்பெறக்கூடாது என்றுரைத்தார்.
வேலைவாய்ப்பின்மைகளால் இளையதலைமுறை துன்புறுவதையும், பணத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தால் முதியோர் கைவிடப்படுவதையும் குறித்து தன் மறையுரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதியோர் இல்லங்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறும் மக்கள் குறித்து தன் நன்றியையும் பாராட்டையும் வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.