2014-09-27 15:58:56

அணுப் பரிசோதனை தடை ஒப்பந்தம் அமல்படுத்தப்பட ஐ.நா. வலியுறுத்தல்


செப்.27,2014. பான் கி மூன் அவர்கள், செப்டம்பர் 26, இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக அணு ஆயுத ஒழிப்பு நாளுக்கென வெளியிட்ட செய்தியில், உலகில் கடந்த காலத்தில் நடத்தப்பட்ட அணுப் பரிசோதனைகளின் சேதங்களை மாற்றமுடியாத அதேவேளை, அணுப் பரிசோதனைகளும், அணு ஆயுதப் பரவல்களும் முற்றிலும் தடைசெய்யப்பட்ட நல்லதோர் எதிர்காலத்துக்கு அனைத்துலக சமுதாயம் உழைக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
வரலாற்றில், ஐ.நா. உறுப்பு நாடுகள் பசிபிக் பகுதியில் நடத்தியிருக்கும் அணுப் பரிசோதனைகள், அப்பகுதி தீவு நாடுகளின் மக்கள் வாழ்வில் எத்தகைய கதிர்வீச்சுத் தாக்கத்தையும், சுற்றுச்சூழல் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளன என்பதை நேரில் காண முடிந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார் பான் கி மூன்.
ஐ.நா. வின் 195 உறுப்பு நாடுகளில், 183 நாடுகள், அணுப் பரிசோதனை தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன, இதுவரை 163 நாடுகள் அதனை அமல்படுத்தப்படுத்தியுள்ளன, இவ்வொப்பந்தம் உலக அளவில் நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கு மேலும் இரு நாடுகளின் கையொப்பம் தேவை என்றும் பான் கி மூன் அவர்கள் கூறியுள்ளார்.
இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈரான், இஸ்ரேல், எகிப்து, வட கொரியா, அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய நாடுகள், இவ்வொப்பந்தத்தை அமல்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.