2014-09-26 16:14:00

உலகின் பசியைப் போக்குவதற்கு பெருங்டல்கள் பேணப்பட வேண்டும், ஐ.நா.


செப்.26,2014. உலகின் வருங்கால உணவுப் பாதுகாப்பு, பெருங்கடல்கள் மற்றும் மீனவத் தொழில்களை நல்லமுறையில் நிர்வாகம் செய்வது மற்றும் அவற்றை உறுதியுடன் முன்னேற்றுவதைப் பொறுத்திருக்கின்றது என்று ஐ.நா. அதிகாரி ஒருவர் கூறினார்.
நியுயார்க்கில் நடந்த ஐ.நா.பொது அவையில் உரையாற்றிய ஐ.நா.வின் உணவு மற்றும் பாதுகாப்பு நிறுவன இயக்குனர் ஹோசே கிரசியானா த சில்வா, உலகின் பெருங்கடல்கள் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கு, உறுதியான நடவடிக்கைகளை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டுமாறு கேட்டுக்கொண்டார்.
கடல்பகுதி சுற்றுச்சூழல், இப்பூமியின் நலத்துக்கும் அதைச் சார்ந்துள்ள மக்களின் நலவாழ்வுக்கும் எவ்வளவு முக்கியமானது என்பதையும் குறிப்பிட்டுப் பேசிய த சில்வானோ, உலக மக்களில் 12 விழுக்காட்டினர் மீனவத் தொழிலைச் சார்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
17 விழுக்காடு புரோட்டின் சத்து, மீனவத் தொழிலகங்களையும், நீர்க் கலாச்சாரத்தையும் சார்ந்துள்ளது, அடுத்த இருபது ஆண்டுகளில் இதன் தேவை இருமடங்காகும், ஆனால், பெருங்கடல் மீன்களில் ஏறக்குறைய 28 விழுக்காடு, ஏற்கனவே அதிகமாகப் பிடிக்கப்பட்டுள்ளது எனவும் ஐ.நா.வில் கூறினார் த சில்வா.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.