2014-09-26 16:13:29

அரபுக் கிறிஸ்தவர்கள், மத்திய கிழக்குப் பகுதியின் ஒருங்கிணைந்த அங்கங்கள், ஜோர்டன் அரசர்


செப்.26,2014. அரபுக் கிறிஸ்தவர்கள், மத்திய கிழக்குப் பகுதியின் கடந்தகால, நிகழ்கால மற்றும் வருங்காலத்தின் ஒருங்கிணைந்த அங்கங்கள் என்று ஐ.நா.வின் 69வது பொது அமர்வில் கூறினார் ஜோர்டன் அரசர் 2ம் அப்துல்லா.
மத்திய கிழக்கு வரலாற்றில் கிறிஸ்தவச் சமூகங்கள் முக்கியமான அங்கம் என்றும், கிறிஸ்தவம் முதலில் வளர்ந்த நிலப்பகுதிகளில் இவர்கள் விருந்தாளிகளாகவோ வெளிநாட்டவர்களாகவோ எந்தவகையிலும் கருதப்படக் கூடாது என்றும் ஜோர்டன் அரசர் கூறினார்.
உண்மையான இஸ்லாமின் போதனைகள் தெளிவாக உள்ளன, பாகுபாட்டுக் கலவரங்களும் சண்டைகளும் கடுமையாய்க் கண்டனம் செய்யப்பட வேண்டும், ஒவ்வொரு நாட்டிலும் இருக்கின்ற கிறிஸ்தவர்கள் மற்றும் பிற சமூகங்களுக்கு எதிரான வன்முறையை இஸ்லாம் தடைசெய்கின்றது என்றும் ஜோர்டன் அரசர் கூறினார்.
தவறான மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கு எதிராக உழைப்பதற்கு முஸ்லிம்களையும், பிற தலைவர்களையும் கேட்டுக்கொண்டார் அரசர் 2ம் அப்துல்லா.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.