2014-09-23 16:14:16

உலக வெப்பநிலைப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு உலகினர் அனைவருக்கும் பொறுப்புள்ளது


செப்.23,2014. உலக வெப்பநிலைப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது, அரசுகள், வணிக அமைப்புகள், தொழில் நிறுவனங்கள், நிதியமைப்புகள், குடிமக்கள் சமுதாயம் என, அனைத்துத் தரப்புகளையும் சார்ந்துள்ளது என்று ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார்.
நியுயார்க் நகரில் வெப்பநிலை வாரம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி மூன்று இலட்சம் பேர் கலந்து கொண்ட பேரணிக்குப் பின்னர் உரையாற்றிய பான் கி மூன் அவர்கள், இச்செவ்வாயன்று நியுயார்க் நகரில் தொடங்கப்பட்டுள்ள வெப்பநிலை மாற்றம் குறித்த உலக மாநாட்டில் திட்டவட்டமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்தார்.
120 அரசுகள் மற்றும் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் இம்மாநாட்டில், 2015ம் ஆண்டில் வெப்பநிலையை மட்டுப்படுத்துவது குறித்து ஒரு தெளிவான மற்றும் திட்டவட்டமான கண்ணோட்டங்களுடன் தீர்மானங்கள் எடுக்கப்படும் என்ற தனது எதிர்பார்ப்பையும் தெரிவித்தார் பான் கி மூன்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.