2014-09-22 16:34:36

பல்வேறு இனத்தவர் அமைதியிலும், உடன்பிறந்தோர் உணர்விலும் ஒன்றிணைந்து வாழ முடியும்


செப்.22,2014. பல்வேறு இனத்தவர் மற்றும் பல்வேறு மதத்தவர் எவ்வாறு அமைதியிலும், உடன்பிறந்தோர் உணர்விலும் ஒன்றிணைந்து வாழ முடியும் என்பதை இம்மையம் உணர்த்துகிறது. இங்கு, நல்லிணக்கம், மகிழ்வு, அமைதி ஆகியவற்றை வேறுபாடுகள் தடைசெய்யாது. மாறாக, ஒருவர் ஒருவரைப் புரிந்து கொள்வதற்கும், அறிவதற்கும் நல்ல தருணங்களை இம்மையம் வழங்குகின்றது. பலதரப்பட்ட சமய அனுபவங்கள், உண்மையான மற்றும் மதிப்புமிக்க பிறரன்பை வெளிப்படுத்துகின்றன. இவை, ஒவ்வொரு சமயக் குழுவும், வன்முறை வழியாக அல்ல, அன்பு மூலமாக தன்னை வெளிப்படுத்தவும், நன்மைத்தனத்தைக் காட்டுவதற்கு ஒருபோதும் வெட்கப்படாதிருக்கவும் செய்கின்றன. இந்த மையத்தின் தன்னார்வப் பணியாளர்கள், இயேசு மற்றும் நம்மீதுள்ள அன்பினால், கடந்த பதினைந்து ஆண்டுகளாக மகிழ்வோடு தங்களைத் தியாகம் செய்துள்ளனர். சிறந்த வாழ்வின் இரகசியம், அன்புக்காக, பிறரை அன்புசெய்து தன்னையே வழங்குவதில் அடங்கியுள்ளது
இவ்வாறு இம்மையத்தில் உரையாற்றியபோது, இங்கு தன்னை வரவேற்றுப் பேசிய, இங்கு வளர்ந்து கிறிஸ்தவரான மிரியன் பால் என்ற இளைஞரின் வார்த்தைகளையும் குறிப்பிட்டார் திருத்தந்தை. உதவி தேவைப்படும் மாற்றுத்திறானாளிகள் மற்றும் கைவிடப்பட்ட சிறார் பராமரிக்கப்படும் திரானா, பெத்தனி மையமானது, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் தன்னார்வப் பணியாளர்களால் நடத்தப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.