2014-09-22 16:44:30

சீனாவில் இரு கத்தோலிக்கக் கோவில்கள் தகர்ப்பு


செப்.22,2014. கடந்த வாரத்தில் சீனாவின் வெவ்வேறு மாகாணங்களில் அரசு அதிகாரிகளால் இரு கத்தோலிக்கக் கோவில்கள் இடிக்கப்பட்டும், ஒரு கோவிலில் சிலுவை வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டும் உள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.
சட்டவிரோதமாக, எவ்வித முன்னறிவிப்புமின்றி நடத்தப்பட்ட இச்செயலை எதிர்த்த அருள்பணியாளர் ஒருவர், காவல்துறையால் கைவிலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
கோவில் இருந்த நிலத்தில் வியாபாரக் கட்டிடங்களை உருவாக்க விரும்பிய அரசின் செயலால் இந்தக் கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளதாக சீனக் கத்தோலிக்கர்கள் தெரிவித்தனர்.
Human மாகாணத்திலுள்ள Jinxi கத்தோலிக்கக் கோவிலும் Jingdezhenலுள்ள நமதன்னை ஆலயமும் இடிக்கப்பட்டுள்ளதுடன், Zhejang மாகாணத்தின் Jington கோவிலுள்ள சிலுவை, அதிகாரிகளால் அகற்றப்பட்டுள்ளது.

ஆதாரம் : Asia News








All the contents on this site are copyrighted ©.