2014-09-22 16:34:19

உடன்பிறந்தோர் உணர்வைக் கட்டியெழுப்பும் உயர்வான கலாச்சாரம் அல்பேனியாவில் உள்ளது


செப்.22,2014. அல்பேனியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், இது முஸ்லிம் நாடு அல்ல, இது ஒரு ஐரோப்பிய நாடு, இந்நாட்டில், இஸ்லாம், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவம், கத்தோலிக்கம் ஆகிய மூன்று முக்கிய மதத்தினர் மத்தியில் ஒத்துழைப்பு காணப்படுகின்றது. ஒன்றிணைந்து வாழ்தல், சகிப்புத்தன்மை, உடன்பிறந்தோர் உணர்வு ஆகிய கலாச்சாரம் முக்கியத்துவம் பெறுகின்றது, ஐரோப்பாவில் இது இளமையான, நாடு, இங்குதான் உடன்பிறந்தோர் உணர்வைக் கட்டியெழுப்பும் சக்திபடைத்த உயர்வான கலாச்சாரம் இருக்கின்றது, இந்நாட்டில் கம்யூனிச ஆட்சியில் இடம்பெற்ற அடக்குமுறைகள் பற்றி புரிந்துகொள்வதற்கு இரு மாதங்கள் படித்தேன். அக்காலம் ஒரு கொடுமையான காலம். கத்தோலிக்கர் மட்டுமல்லாமல், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களுமே தங்களின் கடவுள் நம்பிக்கைக்காகக் கொல்லப்பட்டுள்ளனர், சித்ரவதைக்கு உள்ளாகியுள்ளனர். இந்த மூன்று மதத்தவருமே தற்போது தங்களின் உடன்பிறந்தோர் உணர்வுக்குச் சாட்சியாக வாழ்கின்றனர். 27 ஆண்டுகள் சிறையில் இருந்த ஒரு கத்தோலிக்க அருள்பணியாளர் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டபோது எனது கண்களில் கண்ணீர் சொரிந்தது. இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அல்பேனியத் திருப்பயணத்தை நிறைவுசெய்து திரும்பிய விமானப் பயணத்தில் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.