2014-09-22 16:48:06

2100ம் ஆண்டில் உலக மக்கள்தொகை 1100 கோடி


செப்.22,2014. உலகின் மக்கள்தொகை 2100ம் ஆண்டில் 1100 கோடியை எட்டும் என ஐ.நா.வால் அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை உரைக்கிறது.
ஏற்கனவே கணிக்கப்பட்டதைவிட 200 கோடி அதிகம் எனக்கூறும் ஐ.நா. அறிக்கை, இதற்கு ஆப்ரிக்கக் கண்டத்தின் மக்கள் தொகை பெருக்கத்தைக் காரணமாகக் காட்டுகிறது.
ஆப்ரிக்காவின் மக்கள்தொகை 100 கோடியிலிருந்து இந்நூற்றாண்டின் இறுதிக்குள் 400 கோடியாக உயரும் என அறிவிக்கும் இந்த ஆய்வறிக்கை, 440 கோடியாக இருக்கும் ஆசிய மக்கள் தொகை 2050ம் ஆண்டில் 500 கோடியை எட்டினாலும், அதற்கு பின்னான ஆண்டுகளில் வேகமாக குறைய ஆரம்பிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

ஆதாரம் : Catholic Online








All the contents on this site are copyrighted ©.