2014-09-17 16:32:27

ஜம்மு-காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்க்கு உதவிக்கு விண்ணப்பம்


செப்.17,2014. கடந்த வாரத்தில் ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட பெருவெள்ளம் வரலாற்றில் இதுவரை கண்டிராத வெள்ளம் என்றும், இது அனைத்தையும் அடித்துச்சென்றுள்ளது என்றும் ஜம்மு-ஸ்ரீநகர் ஆயர் பீட்டர் செலஸ்டின் கூறினார்.
இவ்வெள்ளம் மக்களின் வாழ்வையும், வாழ்வாதாரங்களையும் ஒன்றுமில்லாமல் ஆக்கியுள்ளது என்று ஆயர் செலஸ்டின் மேலும் கூறினார்.
அப்பகுதியில் பெய்த பருவமழையால் Jhelum நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெருவெள்ளத்தை ஏற்படுத்தியது. இதனால் பள்ளத்தாக்கிலுள்ள ஏறக்குறைய 600 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
மேலும், 1,30,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர், மேலும் 3 இலட்சம் கிராமத்தினர் உதவிக்காகக் காத்திருக்கின்றனர் என்று நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள இயேசு சபை குருக்கள் கூறினர்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.