2014-09-16 16:28:54

திருப்பீடத்துக்கும் வியட்நாமுக்கும் இடையே உறவை உறுதிப்படுத்த தொடர் முயற்சி


செப்.16,2014. ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளாக நிவர்த்தி செய்ய இயலாத நிலையிலிருந்த திருப்பீடத்துக்கும் வியட்நாமுக்கும் இடையேயான உறவைச் சீர்செய்வதற்கென ஐந்தாவது சுற்றுப்பேச்சுவார்த்தைகள் கடந்த வாரத்தில் இடம்பெற்றன.
திருப்பீடத்துக்கும் வியட்நாமுக்கும் இடையே அண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை திருத்தந்தை ஆர்வமுடன் கவனித்து வருவதாகவும், வியட்நாமின் முக்கிய இலக்குகளில் அந்நாட்டுக் கத்தோலிக்க சமுதாயம் தொடர்ந்து தனது பங்கை அளிக்குமாறும் திருத்தந்தை ஊக்கப்படுத்தி வருவதாகவும் இப்பேச்சுவார்த்தைகளில் தெரிவிக்கப்பட்டது.
திருப்பீட-வியட்நாம் குழு 2009ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் இக்குழு, இவ்விரு தரப்புக்கிடையே உறவை வலுப்படுத்தி வளர்ப்பதற்குப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.
வியட்நாமில் கம்யூனிச அதிகாரிகள் ஆட்சிக்கு வந்தபின்னர் 1975ல் திருப்பீடத்துக்கும் வியட்நாமுக்கும் இடையேயான அரசியல் உறவு முறிந்தது.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.