2014-09-12 16:29:44

போர் நினைவுச் சின்னமான 'Redipuglia'வுக்கு திருத்தந்தை பிரான்சிஸ்


செப்.12,2014. இத்தாலியில் முதல் உலகப்போரில் இறந்தவர்களின் நினைவுச் சின்னமான 'Redipuglia'வுக்கு, செப்டம்பர் 13, இச்சனிக்கிழமை காலையில் சென்று, போரில் இறந்தவர்களுக்கு தனது மரியாதையைச் செலுத்தவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒரு இலட்சத்தின் நினைவுச் சின்னம் எனவும் அழைக்கப்படும் 'Redipuglia'வுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சென்று திருப்பலியும் நிகழ்த்துவார். ஆஸ்ட்ரிய-ஹங்கேரி எல்லையில் Foglianoவிலுள்ள போரில் இறந்தவர்களின் கல்லறையையும் தரிசிப்பார் திருத்தந்தை.
சுலோவேனியா எல்லையில் தெற்கே Gorizia மாநிலத்திலுள்ள 'Redipuglia', முதல் உலகப் போர் சமயத்தில் முக்கிய போர்க்களமாக அமைந்திருந்தது.
ஆஸ்ட்ரிய-ஹங்கேரிப் பேரரசின் வாரிசு இளவரசர் Franz Ferdinand அவர்கள், 1914ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி Sarajevoவில் சுட்டுக் கொலை செய்யப்பட்டதையடுத்து பெரிய போர் எனப்படும் முதல் உலகப்போர் ஆரம்பமானது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.