2014-09-08 15:58:53

திருத்தந்தை : முரண்பாடுகள் களையப்பட ஆயுதங்கள் உதவாது


செப்.08,2014. ஆயுதமோதல்கள் அற்ற ஒரு வருங்காலத்தை உருவாக்குவதற்கு ஒருவர் ஒருவரைப் புரிந்துகொள்ளுதலும், பேச்சுவார்த்தைகளும், ஒத்துழைப்பும் இன்றியமையாதவை என்ற செய்தியை பெல்ஜியத்தில் இடம்பெறும் அனைத்துலக அமைதி கருத்தரங்கிற்கு அனுப்பியுள்ளளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கத்தோலிக்க சான் எஜிதியோ அமைப்பும், பெல்ஜியத்தின் Antwerp மறைமாவட்டமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள பல்சமயக் கூட்டத்திற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'அமைதியே வருங்காலம்' என இவ்வாண்டிற்கெனெ எடுக்கப்பட்டுள்ள தலைப்பு, முரண்பாடுகளையும் அநீதிகளையும் சரிசெய்ய ஆயுதத்தைக் கையிலெடுத்தல் பலன் தராது என்பதை மீண்டும் வலியுறுத்துவதாக இருக்கும் என்ற தன் நம்பிக்கையை அதில் வெளியிட்டுள்ளார்.
மனக்காயங்களைக் குணப்படுத்துவதிலும், மோதல்களை நிறுத்துவதிலும், அமைதியை உருவாக்குவதிலும் மதங்களின் ஒத்துழைப்பை நாடியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதில் செபத்தின் முக்கிய பங்களிப்பையும் வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.