2014-09-04 16:33:33

புனித பூமியில் உள்ள இந்தியக் கிறிஸ்தவர்கள், மரியன்னையின் பிறந்த நாளைக் கொண்டாட ஏற்பாடுகள்


செப்.04,2014. புனித பூமியில் உள்ள இந்தியக் கிறிஸ்தவர்களை ஒருங்கிணைத்து, செப்டம்பர் 8ம் தேதி, மரியன்னையின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஏற்பாடுகள் அங்கு நடைபெற்று வருகின்றன என்று புனித பூமியில் பணியாற்றும் அருள் பணியாளர் ஒருவர் கூறினார்.
இந்தியாவில் கோவாவில் வாழும் 'கொங்கனி' மொழி பேசுவோர் செப்டம்பர் 8ம் தேதியை ஒரு சிறப்பானத் திருநாளாகவும், அறுவடை நாளாகவும் கொண்டாடி வருகின்றனர்.
பல நாடுகளிலும் பணியாற்றச் சென்றுள்ள 'கொங்கனி' மொழி பேசும் குழுவினர், இந்தச் சிறப்பான விழாவை அந்தந்த நாடுகளில் ஏற்பாடு செய்து வருகின்றனர் என்று அருள் பணியாளர் Tojy Jose அவர்கள், CNA செய்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.
புனித பூமியில், Jaffa, Tel Aviv, எருசலேம் ஆகிய நகரங்களில் பணியாற்றிவரும் 'கொங்கனி' நாழி பேசுவோர், செப்டம்பர் 8ம் தேதி விடுமுறை நாள் இல்லையென்பதால், அடுத்துவரும் சனிக்கிழமையன்று இவ்விழாவைச் சிறப்பிக்க உள்ளனர் என்றும், அதற்கு ஒரு தயாரிப்பாக நவநாள் முயற்சிகள் துவங்கியுள்ளன என்றும் அருள் பணியாளர் Jose அவர்கள்கூறினார்.
செப்டம்பர் 8ம் தேதி கொண்டாடப்படும் மரியன்னையின் பிறந்தநாள் விழா, தமிழகத்தில், வேளாங்கண்ணி அன்னையின் திருநாளாகச் சிறப்பிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : CNA/EWTN








All the contents on this site are copyrighted ©.