2014-09-03 15:56:12

வட அமெரிக்காவில், முதன்முதலாக நிறுவப்பட்ட கத்தோலிக்கக் கோவிலின் 350ம் ஆண்டு நிறைவில் திருத்தந்தையின் பிரதிநிதி


செப்.03,2014. கனடா நாட்டு ஆயர்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டம், செப்டம்பர் 15 முதல் 19 முடிய Quebec நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வட அமெரிக்காவில், Quebec நகரில், முதன்முதலாக நிறுவப்பட்ட கத்தோலிக்கக் கோவிலான Notre Dame ஆலயத்தின் 350ம் ஆண்டு நிறைவு விழா, இந்த ஆண்டுக் கூட்டத்திற்கு முந்திய நாள், செப்டம்பர் 14, ஞாயிறன்று, கொண்டாடப்படுகிறது.
இந்தக் கொண்டாட்டத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சார்பில், கியூபா நாட்டின் ஹவானா பேராயர் கர்தினால் Jaime Lucas Ortega y Alamino அவர்கள் கலந்துகொண்டு ஆரம்பத் திருப்பலியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற அக்டோபர் மாதத்தில், குடும்பங்களை மையப்படுத்தி, வத்திக்கானில் நடைபெறவிருக்கும் சிறப்பு ஆயர் மாமன்றத்திற்கு ஒரு தயாரிப்பாக, கனடா ஆயர்கள் பேரவையின் ஆண்டு கூட்டம் நடைபெறும் என்று பேரவைச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.