2014-09-03 16:11:09

புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் உடலை பார்க்கவரும் 50 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கோவா அரசு செய்துவரும் ஏற்பாடுகள்


செப்.03,2014. கோவாவில் பத்தாண்டுகளுக்குப் பிறகு புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் உடல் மக்கள் பார்வைக்கு வைக்கப்படுவதையொட்டி கோவா அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவருவதாக அறிவித்துள்ளது.
இவ்வாண்டு நவம்பர் 22ம் தேதிமுதல், வரும் ஆண்டு சனவரி முடிய 44 நாட்களுக்கு நடைபெறும் இந்தச் சிறப்பு நிகழ்வில் 50 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வர் என்று கூறப்படுகிறது.
புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் அழிவுறாத உடல் வைக்கப்பட்டுள்ள Bom Jesus பசிலிக்காவையொட்டி, திருப்பயணிகளின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றும் வசதிகள் செய்து தரப்படும் என்று கோவா அரசு அறிவித்துள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் காவல்துறையினர், வளாகத்தைச் சுற்றி, பல இடங்களில் கண்காணிப்புக் காமிராக்களைப் பொருத்தி, எவ்வித அசம்பாவிதமும் நிகழாதவண்ணம் கண்காணிப்பர் என்றும் அறிவித்துள்ளது.
2004ம் ஆண்டு புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் உடல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டபோது, 25 இலட்சத்திற்கும் அதிகமானோர் இந்தியாவிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வந்திருந்தனர் என்றும், தற்போது நிகழவிருக்கும் இந்த சிறப்பு நாட்களில் 50 இலட்சத்திற்கும் அதிகமான மக்களை எதிப்ர்பார்ப்பதாகவும் கோவா அரசு கணித்துள்ளது.

ஆதாரம் : UCAN / TOI








All the contents on this site are copyrighted ©.