2014-09-01 15:08:48

காசா பகுதியின் மோதல்களால் விவசாயம் மற்றும் மீன்வளத்துறைகளில் 10 கோடி டாலர்களுக்கு மேல் இழப்பு


செப்.01,2014. மத்தியக்கிழக்கின் காசா பகுதியில் அண்மையில் இடம்பெற்ற மோதல்களால் அப்பகுதியின் விவசாயம் மற்றும் மீன்வளத்துறைகளில் 10 கோடி டாலர்களுக்கு மேல் இழப்பும், 8,700க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வருமான இழப்பும் ஏற்பட்டுள்ளதாக Christian Aid அமைப்பின் விவசாய மேம்பாட்டுக்கழகம் அறிவித்தது.
அண்மையில் இவ்வமைப்பு நடத்திய ஆய்வில், 3,670 ஏக்கர் பயிர் நிலங்கள் இப்போரால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பயிர் நிலங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன், மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள், 1161 தேன்கூடுகள் போன்றவையும் அழிவுக்குள்ளாகியுள்ளன.
விவசாயத்துறையும் மீன்வளத்துறையும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், காசா பகுதியில் பொருட்களின் விலை பெருமளவில் அதிகரித்துள்ளதாகவும் Christian Aid அமைப்பின் விவசாய மேம்பாட்டுக் கழகம் அறிவிக்கிறது.

ஆதாரம் : ICN








All the contents on this site are copyrighted ©.