2014-08-26 15:53:54

பாலின நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்னாள் திருப்பீடத் தூதரை விசாரிக்கத் தடையில்லை


ஆக.26,2014. தொமினிக்கன் குடியரசில் திருப்பீடத் தூதராகப் பணியாற்றியபோது சிறார்களுடன் பாலின நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பேராயர் Jozef Wesolowski அவர்களின் அரசியல் தூதருக்குரிய அனைத்துச் சலுகைகளும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குருத்துவப் பணிகளிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் திருப்பீடத் தூதர், Wesolowski அவர்கள், நீதி கேட்டு, திருப்பீட நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளதாகவும், அதன் முடிவுகள் தெரிந்தபின்னர், வத்திக்கான் நாட்டின் பொது நீதிமன்றத்தில் அவர் விசாரிக்கப்படுவார் என்றும் அறிவித்தார், திருப்பீடச் செய்தித் தொடர்பாளர், அருள்பணி Federico Lombardi.
முன்னாள் திருப்பீடத் தூதர், Wesolowski அவர்கள், தன் குருத்துவப்பணி குறித்து விடுத்துள்ள விண்ணப்பத்தின் மீதான தீர்ப்பு, அக்டோபர் மாதம் வெளிவரலாம் என்று உரைத்த, அருள்பணி லொம்பார்தி அவர்கள், அதன்பின், வத்திக்கான் பொது நீதிமன்ற வழக்கு தொடரப்படும் என்றும், அதே நேரத்தில், இது தொடர்பாக, ஏனைய அரசு நீதிமன்றங்கள் Wesolowski அவர்களை விசாரிக்க விரும்பினால், அதற்கு வத்திக்கானின் தடையிருக்காது என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.