2014-08-26 15:47:11

துன்புறும் கிறிஸ்தவர்கள் பற்றி உலக நாடுகள் அக்கறையின்றி செயல்படுவது தவறானது - உலக யூத அமைப்பின் தலைவர்


ஆக.26,2014. மத்தியக் கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதை அறிந்தும், உலகம் அமைதிகாப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று அறிவித்துள்ளார், உலக யூத அமைப்பின் தலைவர், Ronald Lauder.
மத்தியக் கிழக்குப் பகுதியிலும், உலகின் ஏனையப் பகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து சித்ரவதைகளை அனுபவித்து வருவதும், அதுகுறித்து உலக நாடுகள் அக்கறையின்றி செயல்படுவதும் தவறானது, மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று Lauder அவர்கள் எடுத்துரைத்தார்.
மத்தியக் கிழக்குப் பகுதியிலும், ஆப்ரிக்காவிலும் தற்போது சித்ரவதைகளை அனுபவிக்கும் கிறிஸ்தவர்கள், ஆண்டாண்டு காலமாக இப்பகுதிகளில் அமைதியில் வாழ்ந்தவர்கள் என்பதையும், உலக யூத அமைப்பின் தலைவர் Lauder அவர்கள் சுட்டிக்காட்டினார்.
உலகச் சமுதாயத்தின் மௌனம் குறித்து தனக்குப் புரியவில்லை என்று மேலும் தன் கவலையை வெளியிட்டார், Lauder அவர்கள்.

ஆதாரம் : EWTN








All the contents on this site are copyrighted ©.