2014-08-23 15:30:29

எபோலா நோய் பரவுவதைத் தடுப்பதற்கு மேற்கத்திய நாடுகளின் உடனடி உதவிகள் தேவை, லைபீரியப் பேராயர்


ஆக.23,2014. மேற்கு ஆப்ரிக்காவில் பரவியுள்ள எபோலா ஆள்கொல்லி நோய், இதயத்தை நொறுக்கும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது என்று, லைபீரிய தலத்திருஅவை தலைவர் ஒருவர் கூறினார்.
எபோலா நோயின் தாக்கம் குறித்து வத்திக்கான் வானொலிக்கு இச்சனிக்கிழமையன்று பேட்டியளித்த லைபீரியத் தலைநகர் மொன்ரோவியப் பேராயர் Lewis Zeigler அவர்கள், இந்நோய் பரவுவதைத் தடுப்பதற்கு லைபீரியாவால் மட்டும் இயலாது, இதற்கு மேற்கத்திய நாடுகளின் உடனடி உதவிகள் தேவை என்று கூறினார்.
மேலும், எபோலா நோய், மேற்கு ஆப்ரிக்காவில், குறிப்பாக, லைபீரியாவில் அதன் நலவாழ்வு அமைப்புகளை வீழ்த்தியிருப்பதோடு, மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும் உண்டுபண்ணியுள்ளது என எல்லைகளற்ற மருத்துவ அமைப்பு கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.