2014-08-17 13:57:12

ஆறாவது ஆசிய இளையோர் தின நிறைவு திருப்பலியில் கர்தினால் கிரேசியஸ்


ஆக.17,2014. திருத்தந்தையே, இங்கு கூடியுள்ள பல்லாயிரக்கணக்கான இளையோர் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன். “ஆசிய இளையோரே! எழுந்திருங்கள்! மறைசாட்சிகளின் மகிமை உங்களில் சுடர்விடுகின்றது” என்ற உமது செய்தியால், நாங்கள் எவ்வளவு தூரம் தூண்டப்பட்டுள்ளோம்! கொரியா எங்கும், ஆசியா எங்கும், உலகெங்கும் நற்செய்தியின் மகிழ்வை எடுத்துச் செல்வதில் ஆர்வமாக இருக்கிறோம். ஐந்து நாள்கள் ஆர்வத்திலும் செபத்திலும் செலவழித்துள்ளோம். இப்போது நற்செய்தி மீதான எமது தாகம் எமது இளம் உணர்வை மீண்டும் தூண்டிவிட்டுள்ளது. உண்மையான சீடத்துவம் பற்றிய திருமுழுக்கு அர்ப்பணத்தை ஆழமாக உணர்ந்துள்ளோம். ஒதுக்கப்படுதல், தன்னலம், ஒழுக்கமின்மை, பொருளிய உணர்வு ஆகியவற்றை விலக்கி நடக்கவும், எம்மோடு எடுத்துச்செல்ல நாங்கள் விரும்பும் இயேசுவோடு ஆள்-ஆள் உறவு கொள்ளவும் தீர்மானம் எடுக்கிறோம். ஏழைகள், தேவையில் இருப்போர், தனிமையில் வாடுவோர் ஆகியவர்களுக்கு உதவ முன்வருகிறோம். எமக்காகக் காத்திருக்கும் உலகுக்கு ஆவலோடு ஆகட்டும் எனச் சொல்கிறோம். 2017ம் ஆண்டில் அடுத்த ஆசிய இளையோர் தினத்தை இந்தோனேசியாவில் சிறப்பிக்கத் தயாரிக்கும் நாங்கள் எம் தோள்களிலும், இதயங்களிலும் எம் வாழ்விலும் இயேசுவின் சிலுவையை மகிமையோடும், பெருமையோடும் சுமந்து செல்கிறோம். இவ்வாறு கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள் திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்தார்.

ஆதராம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.