2014-08-07 16:27:09

ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலின் 69வது ஆண்டு நினைவு - Pax Christi அமைப்பு


ஆக.07,2014. ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலின் 69வது ஆண்டு நினைவைக் கடைபிடிக்கும் ஒரு முயற்சியாக, Pax Christi அமைப்பினர், இப்புதனன்று Westminster பேராலயத்திற்கு முன்பாக அமைதி செப வழிபாட்டை மேற்கொண்டனர்.
முதல் உலகப் போரின் 100ம் ஆண்டை நினைவுகூரும் இவ்வேளையில், இருபதாம் நூற்றாண்டு இரு உலகப் போர்களை மேற்கொண்ட காரணங்களை ஆய்வு செய்ய நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று ஜப்பான் ஆயர்கள் விடுத்துள்ள அறிக்கையை, Pax Christi தலைவர், Pat Gaffney அவர்கள், இந்த வழிபாட்டில் வாசித்தார்.
போர் மனிதர்களின் செயல்பாடு, போர் மனித உயிரின் அழிவு, போரை விட மதியற்ற ஒரு செயல் இருக்க முடியாது என்பதை ஹிரோஷிமா நமக்கு நினைவுறுத்துகிறது என்று புனிதத் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், ஜப்பானுக்கு 1981ம் ஆண்டு சென்றபோது, ஹிரோஷிமா அமைதி நினைவிடத்தில் கூறினார்.
புனிதத் திருத்தந்தையின் இந்தக் கூற்றும் Pax Christi அமைப்பினர் மேற்கொண்ட இந்த வழிபாட்டில் வாசிக்கப்பட்டது.
மேலும் Pax Christi அமைப்பினர், ஆகஸ்ட் 9, இச்சனிக்கிழமையன்று நாகசாகி அணுகுண்டு வீச்சு நினைவையும் கடைபிடிக்க திட்டமிட்டுள்ளனர்.

ஆதாரம் : ICN








All the contents on this site are copyrighted ©.