2014-07-28 16:29:41

சூடான், தென்சூடான் மோதல்கள் குறித்து கிழக்கு ஆப்ரிக்க ஆயர்கள் கவலை


ஜூலை,28,2014. சூடான், தென்சூடான், சொமாலியா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் மோதல்கள் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது கிழக்கு ஆப்ரிக்க ஆயர்கள் பேரவை.
'உண்மை மனந்திரும்பல் மற்றும் கிறிஸ்தவ விசுவாசத்திற்கான சாட்சியம் மூலம் புதிய நற்செய்தி அறிவிப்பு’ என்ற தலைப்பில் கிழக்கு ஆப்ரிக்க ஆயர்கள் நடத்திய 18வது நிறையமர்வுக் கூட்டத்தின் இறுதியில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஆயர்கள், இன்றைய உலகின் பதட்டநிலைகள், குடும்பங்கள், திருமணங்கள் போன்றவைகளில் எழுந்துள்ள நெருக்கடிகள், அறநெறி வாழ்வில் ஏற்பட்டுள்ள சரிவு, வேலைவாய்ப்பின்மை, ஏழ்மை ஆகியவை குறித்து கவலையை வெளியிட்டுள்ளனர்.
தகவல் தொழில்நுட்பப் பயன்பாடு ஆப்ரிக்கத் திருஅவையில் அதிகம் அதிகமாக புகுத்தப்படவேண்டும் என்பதையும் ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அமைதியின் கருவிகளாக இளையோரைப் பயன்படுத்துவதில் திருஅவையின் கடமைகளையும் கிழக்கு ஆப்ரிக்க ஆயர்கள் தங்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.