2014-07-26 15:23:56

மனித வளர்ச்சி குறியீட்டில் இந்தியாவுக்கு 135வது இடம்


ஜூலை,26,2014. UNDP என்ற ஐ.நா. வளர்ச்சித்திட்ட நிறுவனம் 187 நாடுகளில் மனித வளர்ச்சி குறித்து எடுத்த ஆய்வில் இந்தியா 135வது இடத்தைப் பெற்றுள்ளது.
மக்களின் சராசரி ஆயுள்காலம், கல்வி, வருவாய் ஆகியவற்றை வைத்து ஒரு நாட்டு மக்களின் வளர்ச்சி கணிக்கப்படுகிறது.
இதன்படி, மனித வளர்ச்சி குறித்து UNDP நிறுவனம் இவ்வாண்டில் வெளியிட்ட புதிய அறிக்கையில், பாலியல் சமத்துவ நிலையில் 152 நாடுகளில் 127வது இடத்தையும், பாலின முறையிலான வளர்ச்சியில் 148 நாடுகளில் 132வது இடத்தையும் இந்தியா பெற்றுள்ளது.
மேலும், எழுத்தறிவின்மை, நலவாழ்வு வசதிக்குறைவு போன்றவை உட்பட அதிகமான ஏழைகளைக் கொண்டுள்ள பகுதியாக தெற்கு ஆசியா சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இம்மாதிரியான நிலையில் 80 கோடிப்பேர் வாழ்வதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : IANS







All the contents on this site are copyrighted ©.