2014-07-25 15:50:22

வட இலங்கையில் பெரும் அழிவுகள்


ஜூலை,25,2014. இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்குப் பகுதியில் இராணுவத்தின் அதிகபட்ச பாதுகாப்பு வலயமாக உள்ள பல கிராமங்களில் பொதுமக்களின் வீடுகள், ஆலயங்கள், பள்ளிகள், பொதுக் கட்டிடங்கள் என எதுவுமே இல்லாமல் வெட்டவெளியாக இருப்பதாக அங்குச் சென்று திரும்பியவர்கள் கூறியுள்ளனர்.
மயிலிட்டி வீரமாணிக்கந்தேவன்துறையில் அமைந்துள்ள முருகன் ஆலயம் மற்றும் கண்ணகை அம்மன் ஆலயங்களில் அந்தப் பகுதி மக்கள் வழிபாடு செய்வதற்காக இராணுவம் அனுமதி வழங்கியிருந்தது.
இதனையடுத்து, மயிலிட்டி பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்களை இராணுவத்தினர் அங்கு அழைத்துச் சென்றிருந்தனர்.
ஆனால் அங்குச் சென்று திரும்பியுள்ள மக்கள், அந்தப் பகுதிகளில் முன்னர் இருந்த பல ஆலயங்களையும், பள்ளிகளையும் காணவில்லை எனவும், அங்கு மீள்குடியேற வேண்டும் என்ற சந்தேகம் தங்களுக்கு எழும்பியிருப்பதாகவும் கூறியுள்ளனர்.
மேலும், இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக விசாரிக்கவிருக்கும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் விசாரணைக் குழுவிற்குத் தேவையான விசா வழங்க உதவ வேண்டுமென தமிழக அரசியல் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆதாரம் : பிபிசி







All the contents on this site are copyrighted ©.