2014-07-25 15:48:06

உலக அளவில் உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு சிறார் அடிமை வணிகம் காரணம்


ஜூலை,25,2014. உலக அளவில் உயரினங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு, அதிகரித்துவரும் மனித வணிகமும், சிறார் அடிமைத்தொழிலும் காரணங்களாக உள்ளன என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
ஆண்டுக்கு நானூறு கோடி அமெரிக்க டாலர் மதிப்புடைய உயிரினங்கள் கடலிலும் நிலத்திலுமிருந்து அறுவடை செய்யப்படுகின்றன, இவை உலக மக்கள் தொகையில் 15 விழுக்காட்டினரின் வயிற்றுப் பிழைப்புக்கு உதவுகின்றன என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மேற்கொண்ட ஆய்வு கூறுகிறது.
நிலத்திலும் நீரிலுமிருந்து உயிரினங்களை அறுவடை செய்வதற்கு வேலை செய்வோர் அதிகமாகத் தேவைப்படுகின்றனர், இத்தொழில்களுக்கு, குறிப்பாக மீன் தொழிற்சாலைகளில் குறைவான ஊதியத்துக்குச் சிறார் பயன்படுத்தப்படுகின்றனர் எனவும் அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.
மியான்மார், கம்போடியா, தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்து ஆண்கள் மீன்பிடிப் படகுகளுக்கு விற்கப்பட்டு, கடலில் பல ஆண்டுகள் ஊதியமின்றி வேலை செய்கின்றனர், 18 முதல் 20 மணி நேரங்கள்கூட பல நாள்களில் இவர்கள் வேலை செய்கின்றனர் என்றும் அந்த ஆய்வு கூறுகின்றது.

ஆதாரம் : BBC







All the contents on this site are copyrighted ©.