2014-07-16 15:53:52

ஜூலை 30 - உலக வரலாற்றில் முதன் முறையாக மனித வர்த்தக ஒழிப்பு நாள்


ஜூலை,16,2014. உலகின் அனைத்து நாடுகளும் மனித வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டுள்ளன; இந்த வர்த்தகத்தைத் துவக்கும் நாடுகள், இந்த வர்த்தகத்தைப் பயன்படுத்தும் நாடுகள் என்று, பல நிலைகளில் நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன என்று ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மனித வர்த்தக ஒழிப்பு நாளை இவ்வுலகம் முதல் முறையாக இம்மாதம் 30ம் தேதி கடைபிடிக்க உள்ள இவ்வேளையில், இந்த உலக நாளையொட்டி, ஐ.நா. அவை பல்வேறு முயற்சிகளைத் துவக்கியுள்ளது.
இந்நாளையொட்டி சிறப்புச் செய்தி வெளியிட்ட ஐ.நா. உயர் அதிகாரி, John Ashe அவர்கள், மனித வர்த்தகம் என்ற கொடுமையால் பெருமளவில் பாதிக்கப்படுவோர், பெண்களும், குழந்தைகளுமே என்று கூறினார்.
அறிவியல், காலாச்சாரம் ஆகியவை இவ்வளவு உயர் நிலையை அடைந்துள்ள இன்றைய உலகில், மனித வர்த்தகம் என்ற அடிமைத்தனம் இன்னும் நிலவுகிறது என்பது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது என்று John Ashe அவர்கள் எடுத்துரைத்தார்.
உலக வரலாற்றில் முதன் முறையாக மனித வர்த்தக ஒழிப்பு நாள் கடைபிடிக்கப்படுவதையொட்டி, இப்பிரச்சனை குறித்த விழிப்புணர்வை உருவாக்க, ஐ.நா.அவை, பல நாடுகளில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.