2014-07-15 15:57:33

‘ஆண்டிபயாடிக்’ மருந்து பயன்பாட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது


ஜூலை 15,2014. உலகில் தொற்றுநோய்க் கட்டுப்பாட்டுக்கு பயன்படும் ‘ஆண்டிபயாடிக்’ மருந்துக்களின் பயன்பாடு அதிகரித்து வருவதாகவும், இதனால் மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் அண்மைகால ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
2000க்கும் 2010க்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளின் பயன்பாடு 36 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும், இதில் பெரும்பகுதிக்குக் காரணம் இந்தியா, சீனா, பிரசில், இரஷ்யா மற்றும் தென்னாப்ரிக்காவுமேயாகும் எனவும் அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
‘ஆண்டிபயாடிக்’ மருந்துக்களின் தேவையற்ற பயன்பாட்டால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவதோடு, மருந்துக்குக் கட்டுப்படாத புதிய நோய்க்கிருமிகள் பரவுவதற்கும் வாய்ப்பாகிறது என இந்த ஆய்வு எச்சரிக்கிறது.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.