2014-07-15 15:56:07

இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது


ஜூலை 15,2014. இந்தியாவில் சாலைவிபத்துக்களின் எண்ணிக்கை 2011ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2012ம் ஆண்டில் 16 விழுக்காடு அதிகரித்திருந்ததாக மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.
2012ம் ஆண்டில் இந்தியாவில் 75,074 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன எனவும், தலைநகர் டில்லி, ஐதராபாத், புனே, சென்னை போன்ற நகர்களில் விபத்துக்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் அதிகரித்துள்ளன எனவும் அமைச்சர் கிஷன்பால் குர்ஜரின் அறிக்கை தெரிவிக்கிறது. சென்னையில் இடம்பெற்ற 9663 சாலை விபத்துக்களில் 1401 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் ரயில் தண்டவாள விபத்துக்களில் 600 பேர் பலியாகியுள்ளனர்.

ஆதாரம் : தினமலர்








All the contents on this site are copyrighted ©.