2014-07-12 15:18:28

திருத்தந்தை பிரான்சிஸ் : விளையாட்டு எப்பொழுதும் கலாச்சாரச் சந்திப்பை ஊக்குவிப்பதாக


ஜூலை,12,2014. உலகக் கோப்பை கால்பந்து போட்டி, பல்வேறு நாடுகளின் மற்றும் பல்வேறு மதங்களின் மக்கள் ஒன்றுசேர்ந்துவர அனுமதித்துள்ளது; விளையாட்டு எப்பொழுதும் கலாச்சாரச் சந்திப்பை ஊக்குவிப்பதாக என, தனது டுவிட்டர் பக்கத்தில் இச்சனிக்கிழமையன்று செய்தி வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்னும், “அமைதிக்கான பல்சமய விளையாட்டு போட்டி” ஒன்றில் விளையாடுவதற்காக, வருகிற செப்டம்பரில் உலகின் புகழ்பெற்ற கால்பந்து விளையாட்டு வீரர்கள் உரோம் ஒலிம்பிக் விளையாட்டு மைதானத்தில் விளையாடவுள்ளனர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விருப்ப விளையாட்டு வீரரான Scholas Occurentesவின் முயற்சியினால் இது நடக்கவிருக்கிறது. பாப்பிறை சமூக அறிவியல் நிறுவனமும் இதை இணைந்து நடத்துகிறது.
அர்ஜென்டீனா கால்பந்து விளையாட்டு அணியின் முன்னாள் தலைவர் Javier Zanetti ஒருங்கிணைக்கும் “அமைதிக்கான பல்சமய விளையாட்டு போட்டி”, வருகிற செப்டம்பர் ஒன்றாந்தேதி உரோமையில் நடக்கும். இதில் Zanetti, Messi, பிரான்சின் Zinadine Zidane, இத்தாலியின் Gianluigi Buffon, Francesco Totti உட்பட பல வீரர்கள் விளையாடவுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.